இந்தியா

ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும் உயிரிழப்பு இல்லை- மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி பதில்

Published On 2022-12-14 16:00 GMT   |   Update On 2022-12-14 16:00 GMT
  • குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாக குறைந்துள்ளது
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது

புதுடெல்லி:

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்பு இல்லை என்றும்,

2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் ஸ்மிருதி இரானி பேசினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ஆள் கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா என்பது அடிமட்ட உண்மை நிலவரம் மற்றும் தேவைகளுக்கு முறையாகப் பதிலளிக்கும் நோக்கத்துடன் மறு வரைவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

Tags:    

Similar News