இந்தியா

ஊழல், வாரிசு அரசியலை ஒழிக்க பணியாற்றி வருகிறோம்: மத்திய மந்திரி

Published On 2024-02-01 07:42 GMT   |   Update On 2024-02-01 07:42 GMT
  • எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.
  • மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக நீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்.

ஊழல் ஒழிப்பையும், வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம். எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.

நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைகின்றனர். இந்திய கல்விக் கொள்கையில் தேசிய கல்விக்கொள்கை பெருமாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம். 10 ஆண்டுகளில் 7 ஐ.ஐ.டி.க்கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News