இந்தியா

பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் மீண்டும் மோடி அரசு அமையும்: நிர்மலா சீதாராமன்

Published On 2024-02-01 07:51 GMT   |   Update On 2024-02-01 07:51 GMT
  • எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சியின் பலன்கள் ஏழைகளை அடையத் தொடங்கியுள்ளது. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.

சமூக நீதி அரசியல் கட்சிகளின் கோஷமாக உள்ள நிலையில் சிறந்த நிர்வாகத்தின் மூலம் அதை செயல்படுத்தி வருகிறோம்.

யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மதசார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வீடுகளுக்கு குடிநீர், அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கியாஸ் சிலிண்டர் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News