இந்தியா
நீட் வினாத்தாள் முறைகேடு.. ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற 3 பேர் ராஜஸ்தானில் கைது
- அப்போது மாணவரின் குடும்பத்தினர் அவர்களிடம் வினாத்தாளை காட்டச் சொன்னார்கள்.
- ஆனால் அவர்கள் மறுக்கவே, மாணவனின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்
இன்று நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக ராஜஸ்தான் போலீஸ் மூன்று பேரை கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பால்வான் (27), முகேஷ் மீனா (40) மற்றும் ஹர்தாஸ் (38) என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை, மூவரும் மாணவனையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் குருகிராமிற்கு அழைத்துச் சென்று பணத்தைக் கேட்டனர். அப்போது மாணவரின் குடும்பத்தினர் அவர்களிடம் வினாத்தாளை காட்டச் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் மறுக்கவே, மாணவனின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.