இந்தியா

நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளம்

Published On 2025-04-27 08:42 IST   |   Update On 2025-04-27 08:42:00 IST
  • NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம்
  • ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க தேசிய தேர்வு முகமை அமைப்பு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது.

NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம் என்றும் ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

Similar News