இந்தியா
பீகார் வெற்றி மோடி, நிதிஷ் குமாரின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை: ஜே.பி. நட்டா
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- பாஜக 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி, நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை" எனக் குறிப்பிட்டுள்ளார்.