இந்தியா

வளர்ச்சிக்கு பெயர் பெற்றது என்.டி.ஏ., அழிவுக்கு பெயர் பெற்றது ஆர்.ஜே.டி.-காங்கிரஸ்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2025-11-03 15:09 IST   |   Update On 2025-11-03 15:09:00 IST
  • ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
  • காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று பிரதமர் மேதாடி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

* முதல் முறையாக வாக்களிப்பவர்கள், தங்களது வாக்குகள், பீகாரில் அடுத்த NDA அரசாங்கத்தை அமைப்பதற்கானது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்

* இந்திய மகள்கள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளனர். இந்த வெற்றி நாட்டின் பெண்களின் தன்னம்பிக்கையை குறிக்கிறது

* ஒரு காலத்தில் 'பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ'வை கேலி செய்தவர்கள் இப்போது இந்தியாவின் மகள்களை அவமதித்ததைப் பற்றி சிந்திக்கிறார்கள்

* விகாஸ்க்கு (வளர்ச்சி) பெயர் பெற்றது தேசிய ஜனநாயக கூட்டணி. அதே நேரத்தில் 'வினாஷ்'க்கு (அழிவு) பெயர் பெற்றது ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ்.

* 2005 தேர்தல் தோல்விக்காக, பீகாரில் அனைத்து மத்திய திட்டங்களையும் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தி பழிவாங்கியது.

* கோசி நதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க நீண்டகால தீர்வுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

* வெளிநாட்டு பயணத்தின்போது உலகத் தலைவர்களுக்கு நான் மக்கானா (makhana) பெட்டிகளை பரிசளிக்கிறேன். இது பீகாரின் விவசாயிகளின் கடின உழைப்பு என்று அவர்களிடம் சொல்லப்படும்.

* ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. டிஎஸ்பி சத்யபால் சிங் சட்டத்தை மீறுவதற்கு எதிராக செயல்பட்டதால் சஹர்சாவில் கொலை செய்யப்பட்டார்.

* ஆட்சிக்கு வந்ததும் நாலந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டுவேன் என்று காங்கிரஸ் நாம்தார் (ராகுல்காந்தி) கூறுகிறார். பொய் சொல்வதற்கும் எல்லை உண்டு.

* நாலந்தா பல்கலைக்கழகத்தின் மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் அரசு ரூ.20 கோடி வழங்கிய நிலையில், நாங்கள் ரூ.2,000 கோடி செலவிட்டோம்.

* காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கோபமாக உள்ளனர். அவர்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தை தோற்கடிக்க பணியாற்றுகிறார்கள்.

* காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News