இந்தியா

குஜராத்: தேசிய தடயவியல் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2025-06-07 10:40 IST   |   Update On 2025-06-07 10:40:00 IST
  • நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்றும், நாளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்றும், நாளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு (NFAT 2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்விப் படிப்புகளில் சேருவதற்கான NFAT தேர்வு 2025 எழுத திட்டமிடப்பட்டுள்ள அனைவருக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.

நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News