இந்தியா
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
- பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார்.
- மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி உள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி, கட்சி வளர்ச்சிப்பணி, சட்டசபை தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி உள்ளார்.