இந்தியா

முத்திய REELS மோகம்.. தண்டவாளத்தில் குப்புறப் படுத்த வாலிபர்.. தாண்டி சென்ற ரெயில் - வீடியோ

Published On 2025-04-08 17:49 IST   |   Update On 2025-04-08 17:49:00 IST
  • உன்னாவோவின் ஹசன்கஞ்சில் வசிப்பவர் ரஞ்சித் சௌராசியா.
  • வீடியோ வைரலானதால் ரெயில்வே போலீசின் கவனத்தையும் ஈர்த்தது.

இன்ஸ்டாகிராம் ரீலிஸ் எடுப்பது சிலருக்கு வெறியாக மாறி வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ்வில் ஒரு நபர் ரெயில் தண்டவாளத்தில் படுத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

உன்னாவோவின் ஹசன்கஞ்சில் வசிக்கும் ரஞ்சித் சௌராசியா தனது ரீலிஸ்-இல், ரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார். அவர் படுத்திருக்க, ரெயில் அவரை கடந்து செல்கிறது. சற்று பிசகியிருந்தாலும் அவர் ரெயிலில் மாட்டி இழுபட்டு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

இந்த வீடியோ வைரலானதால் ரெயில்வே போலீசின் கவனத்தையும் ஈர்த்தது. இது ரஞ்சித் சௌராசியா கைதுக்கு வழிவகுத்தது.

Tags:    

Similar News