மும்பை பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு உதவியவர் கொச்சியில் கைது
- ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
- ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் பாகிஸ்தான்- அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லி. இவனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தஹாவூா் ராணா. இவனது ஆலோசனை மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.
அமெரிக்க சிறையில் இருந்த ராணா, நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து அவரை இந்தியா அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை தாக்குதலுக்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, டெல்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் ராணாவுக்கு உதவியதாக கொச்சியில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொச்சியில் ராணா 13 பேருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எங்கு சந்தித்தனர்? என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் ராணாவையும் கொச்சி அழைத்து வந்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.