இந்தியா

மும்பையில் மீண்டும் விபத்தில் சிக்கிய மோனோ ரெயில்: பயணிகள் அதிர்ச்சி

Published On 2025-11-06 04:33 IST   |   Update On 2025-11-06 04:33:00 IST
  • செப்டம்பர் மாதத்தில் மோனோ ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது.
  • மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அதன் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.

மும்பை:

மும்பையில் மோனோ ரெயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரெயில் உயர்மட்ட பாதையில் தனித்துவமான தண்டவாளத்தில் இயக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 15 மற்றும் 19-ம் தேதிகளில் மோனோ ரெயில்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அதன் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர். மோனோ ரெயில் சேவை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை சோதனை ஓட்டம் நடந்தது. வடாலா டெப்போ அருகே தண்டவாளம் கிராசிங் செய்யும் இடத்தில் சென்றபோது, மற்றொரு தண்டவாளம் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் மோனோ ரெயில் பெட்டியின் அடிப்பகுதி சுக்கு நூறாக நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. இது சோதனை ஓட்டம் என்பதால் ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லை. இதில் ரெயில் ஓட்டுனருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் இது 'சிறிய விபத்து' என மோனோ ரெயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மோனோ ரெயில் தொடர்ந்து ஆபத்துகளில் சிக்கி வருவது பயணிகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News