இந்தியா

அசைவம் சாப்பிட்டதை எதிர்த்த காதலன்- பெண் பைலட் தற்கொலை

Published On 2024-11-28 13:50 IST   |   Update On 2024-11-28 13:50:00 IST
  • பெற்றோரின் புகாரையடுத்து காதலனை போலீசார் கைது செய்தனர்.
  • நவம்பர் 29 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை மாநிலம் அந்தேரி குடியிருப்பு பகுதியில் பெண் பைலட் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசைவம் சாப்பிட்டதால் காதலன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததாகவும் காதலனின் செயலால் மேலும் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோரின் புகாரையடுத்து காதலன் ஆதித்யாவை போலீசார் கைது செய்தனர். ஆதித்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நவம்பர் 29 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா (27), ஜூன் 2023 முதல் வேலை நிமித்தமாக மும்பையில் வசித்து வந்துள்ளார். சிருஷ்டி பண்டிட் (25) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் வணிக விமானி உரிமத்திற்கான பயிற்சியின் போது ஆதித்யாவை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் லீவ்விங்ஷிப் உறவில் இருந்துள்ளனர்.

தற்கொலை சம்பவத்திற்கு முன்பு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு நாட்கள் அந்தேரி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News