இந்தியா
null

தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. ராகுல் காந்திக்கு சசி தரூர் ஆதரவு!

Published On 2025-08-08 14:36 IST   |   Update On 2025-08-08 16:56:00 IST
  • நமது ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது.
  • குற்றத்க்காடுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியறுத்தினார்.

2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தரவுகளுடன் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.

மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 40 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, கர்நாடகா தேர்தலில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டது, போலி வாக்காளர்கள், போலி முகவரி, புகைப்படம் இல்லா வாக்காளர்கள், ஒரே முகவரியில் 30, 40 வாக்காளர்கள், படிவம் 6 மோசடி என 5 வழிகளில் இந்த வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் குற்றம்சாட்டினார்.

மெல்லும் கடந்த 10-15 ஆண்டு வாக்காளர் தரவு மற்றும் வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார்.

"தேர்வு ஆணையம் இந்தத் தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளை எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமான உறுதிமொழியுடன் தரவுகளை சமர்பிக்கும்படி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராகுலின் வீடியோவை பகிர்ந்து சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "இந்த கேள்விகள் மிகவும் தீவிரமானவை, மேலும் அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்களின் நலனுக்காகவும் இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

நமது ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது, அதன் நம்பகத்தன்மை, திறமையின்மை, அலட்சியம் அல்லது வேண்டுமென்றே மோசடி மூலம் அழிக்கப்படக்கூடாது" என்று தெரிவித்த சசி தரூர், குற்றத்க்காடுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியறுத்தினார்.

சமீக காலமாக பிரதமர் மோடியை பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து காங்கிரஸ் தலைமையுடன் இணக்கமின்றி சசி தரூர் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

மறுபுறம், தொடர் தோல்வி விரக்தியில் ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக பாஜக தெரிவித்துள்ளது.   

Tags:    

Similar News