இந்தியா

தலையில் பெரிய கட்டியுடன் சாலையோரம் வீசப்பட்டிருந்த குழந்தை.

தலையில் பெரிய கட்டியுடன் பிறந்த குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்

Published On 2022-08-30 10:23 IST   |   Update On 2022-08-30 10:23:00 IST
  • அப்துல்லா பீ என்ற பெண்மணி குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அருகே சென்று பார்த்தார்.
  • பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தலையில் பெரிய கட்டியுடன் அழுது கொண்டு இருந்தது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஜனகாம மண்டலம், ரகுநாதபுரம் பஸ் நிலையம் அருகே காஞ்சன பள்ளி செல்லும் சாலை ஓரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்ற அப்துல்லா பீ என்ற பெண்மணி குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அருகே சென்று பார்த்தார்.

அப்போது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தலையில் பெரிய கட்டியுடன் அழுது கொண்டு இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து குழந்தையை பரிசோதனை செய்து தலையில் உள்ளது என்ன வகையான கட்டி, அதை உடனடியாக அகற்ற முடியுமா என டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை அனாதையாக சாலையோரம் வீசி சென்ற தாய் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News