இந்தியா

வெடிகுண்டு மிரட்டல் - மாஸ்கோ விமானம் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

Published On 2023-01-10 00:15 IST   |   Update On 2023-01-10 00:15:00 IST
  • மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது.
  • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானம் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஜாம் நகர்:

மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த 236 பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News