இந்தியா

அதிகரிக்கும் பரவல்: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

Published On 2025-06-11 16:40 IST   |   Update On 2025-06-11 16:40:00 IST
  • கொரோனா பெருந்தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது.
  • தற்போது இந்தியாவில் 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பெருந்தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 306 பேருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, 7 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச உள்ளனர்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால் முதல் மந்திரி உள்பட அனைவருக்கும் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் விருந்து வைக்கிறார். டெல்லி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பிரதமர் மோடியின் வீட்டிற்கு செல்கின்றனர்.

இந்நிலையில், பிரதமரை சந்திக்க செல்லும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் என்ற கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியை பார்க்க வரும் அனைவருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News