இந்தியா

பஞ்சாபில் மினி பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 9 பேர் பலி - 33 பேர் படுகாயம்

Published On 2025-07-08 00:34 IST   |   Update On 2025-07-08 00:34:00 IST
  • தசுயா நோக்கி 40 பயணிகளுடன் மினி பஸ் சென்றுகொண்டிருந்தது.
  • உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நேற்று (திங்கள்கிழமை) மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.  

ஹஜிப்பூர் நகரில் இருந்து தசுயா நோக்கி 40 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் தசுயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் என ஹோஷியார்பூர் துணை ஆணையர் ஆஷிகா ஜெயின் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News