இந்தியா

சபரிமலையை புனிதமாக பாதுகாக்க வேண்டும்- பக்தர்களுக்கு மேல்சாந்தி வேண்டுகோள்

Published On 2022-11-23 09:14 IST   |   Update On 2022-11-23 09:14:00 IST
  • தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  • பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலை உள்ளிட்ட பொருட்களை பம்பை ஆற்றில் வீசி எறியக்கூடாது. அதுதான் ஐதீகம் என்று நினைப்பது தவறு.

திருவனந்தபுரம்:

சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சன்னிதானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் தஞ்சமாக சபரிமலை சன்னிதானம், ஐயப்பன் விக்ரகம் விளங்குகிறது. மேலும், தர்மசாஸ்தாவின் இருப்பிடம் என இந்த வனப்பகுதி அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் புனிதமானது. இங்குள்ள ஒவ்வொரு மண்ணும் புனிதமானது. அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். இருமுடிகட்டில் கொண்டு வரும் பொருட்களை மலையில் வைத்து விட்டு செல்லக்கூடாது. புனிதமான புண்ணிய நதி பம்பையாற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலை உள்ளிட்ட பொருட்களை பம்பை ஆற்றில் வீசி எறியக்கூடாது. அதுதான் ஐதீகம் என்று நினைப்பது தவறு. பம்பை ஆற்றை சுத்தமாக வைத்திருப்பது நமது ஆன்மாவை சுத்தமாக வைத்திருப்பதற்கு சமம். சன்னிதானத்தை தூய்மையாக பாதுகாத்து, சபரிமலையை நாட்டிலேயே சிறந்த புனித இடமாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News