இந்தியா

இவர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published On 2023-07-07 16:42 IST   |   Update On 2023-07-07 16:42:00 IST
  • பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்றால் நம்புவது கடினம் தான்.
  • மும்பையைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் உலகின் பெரிய பணக்கார பிச்சைக்காரராகத் திகழ்கிறார்.

மும்பை:

பிச்சைக்காரன் என்றதும் அவர்கள் ஏழைகள் என்பது நினைவுக்கு வருவது சகஜமான ஒன்று. ஆனால் தற்போது பிச்சை எடுப்பது தொழிலாக மாறிவிட்டது.

பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று சொன்னால் நம்புவது கடினமாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர், உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராகத் திகழ்கிறார். இவர் பிச்சையெடுத்தே நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு சகோதரர், அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இவருடைய மாத வருமானம் சுமார் 60,000 முதல் 75,000 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 2 பெட்ரூம் பிளாட் ஒன்று மும்பையில் சொந்தமாக உள்ளது. தானே பகுதியில் இவருக்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளது. அதன் வாடகையாக மட்டுமே மாதம் 30,000 ரூபாய் வருகின்றது.

மொத்தம் இவரது சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்புடையது என்பது அப்பகுதி மக்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

Tags:    

Similar News