இந்தியா

ஏவுகணை தாக்குதலில் பலியான இந்தியர் உடல் கேரளா வந்தடைந்தது: மத்திய மந்திரி நேரில் அஞ்சலி

Published On 2024-03-08 15:46 GMT   |   Update On 2024-03-08 15:46 GMT
  • லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
  • இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த நபர் பலியானார்.

திருவனந்தபுரம்:

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. ஏவுகணை தாக்கியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விரைவில் மேக்ஸ்வெல் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த மேக்ஸ்வெல் உடல் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி முரளீதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்களை மந்திரி முரளீதரன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News