முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இதன்பின், மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மன்மோகன் சிங் மறைவு- வெள்ளை மாளிகை இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கும் உலகத்திற்கும் பெரிய இழப்பு. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும் உலக நாடுகளுடன் நட்புறவையும் உருவாக்க அவ செய்த பங்களிப்புகள் மறக்க முடியாதவை என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - தமிழ்நாடு அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து தெலுங்கானா செயலகம், டேங்க் பண்ட் மற்றும் ஜிஹெச்எம்சி கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - இந்திய கிரிக்கெட் வீரர்கள் மரியாதை
பாக்ஸிங் டே டெஸ்ட்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு பட்டை அணிந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.