இந்தியா

மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள்கள், ஆயுதங்கள் பறிமுதல்

Published On 2025-07-15 14:50 IST   |   Update On 2025-07-15 14:50:00 IST
  • இனக்​கல​வரத்​தால் மணிப்பூர் கடுமையாக பாதிக்​கப்​பட்டது.
  • கடந்த பிப்​ர​வரி​யில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்​பட்​டது.

இம்பால்:

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இனக்குழுக்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவ்பால், காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டம் ஆகிய பகுதிகளின் பல்வேறு இடங்களில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் 86 துப்பாக்கிகள், 9 கையெறி குண்டு லாஞ்சர்களை கைப்பற்றினர். மேலும் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்பட 974 வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News