இந்தியா

வாயில் டேப் ஒட்டி முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்தும், குழந்தையின் தலையை துண்டித்தும் கொலை செய்த கொடூரன்

Published On 2025-07-09 21:14 IST   |   Update On 2025-07-09 21:14:00 IST
  • காதலி பிரிந்து சென்றதால் விரக்தி.
  • முன்னாள் காதலிக்கு அடைக்கலம் கொடுத்த பெண் குடும்பத்தையும் பழிவாங்க முடிவு.

டெல்லியில் முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், அடைக்கலம் கொடுத்தவரின் குழந்தையின் தலையை துண்டித்து கொலை செய்ய கொடூரம் சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள திமர்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் வேலை பார்த்து வந்தவர் நிகில். இவருக்கு காதலி ஒருவர் இருந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். காதலியின் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்த பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த காதல் 6 வருடமாக நீடித்துள்ளது. நிகில் வேலை பார்த்து வந்த ரெஸ்டாரன்ட் அருகே ஒருவர் மொபைல் கடை நடத்தி வந்துள்ளார். மொபைல் கடை நடத்தி வந்தவரின் மனைவிக்கும், நிகிலின் காதலிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தோழிகளாகியுள்ளனர்.

கடந்த வருடம் திடீரென நிகிலுக்கும், அவரது காதலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி காதலியை தாக்கியுள்ளார். இதனால் நிதியை உதறிவிட்டு, தனது தோழி வீட்டில் வந்து தங்கியுள்ளார் அவரது காதலி. நேற்று முன்னாள் காதலியின் தோழியின் வீட்டிற்கு சென்ற நிகில், அவருடன் தகராறு செய்துள்ளான். அத்துடன் முன்னாள் காதலியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளான்.

முன்னாள் காதலி தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது முன்னாள் காதலியின் தோழி, தனது கணவருடன் 5 மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளனர்.

அப்போது நிகில் வீட்டிற்குச் சென்று, தனது முன்னாள் காதலி மற்றும் தோழியின் குழந்தையை ஆகியோரை அடித்து துன்புறுத்தியுள்ளான். பின்னர் சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என இருவரின் வாயிலும் டேப் ஒட்டியுள்ளான். பின்னர் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். பின்னர் பச்சங்குழந்தையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளான்.

கொலை செய்த பின்னர் கத்தியை நன்றாக கழுவியுள்ளான். தன்னை போலீஸ் பின்தொடரக் கூடாது என்பதற்காக செல்போனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளான்.

கொலை குறித்து தகவல் தெரிந்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி, உத்தரகாண்டில் நிகிலை கைது செய்துள்ளனர். முன்னாள் காதலியை பழி வாங்காக, பச்சிளங்குழந்தையை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News