இந்தியா
பாராளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது
- 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற வளாகத்தில் அத்துமீறி மர்ம நபர்கள் ஊடுருவதை தடுப்பதற்காக 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதற்கு சாவல் விடும் வகையில் இன்று காலை 6 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பாராளுமன்ற வளாக சுற்றுச்சுவர் ஓரம் இருந்த மரத்தில் ஏறி சுவரை தாண்டி உள்ளே குதித்தார்.
இதை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பார்த்து உடனடியாக அவரை பிடித்தார். அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பாராளுமன்ற வளாக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.