இந்தியா

ஏர் இந்தியா

முறைகேடான சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் - ஊழியர்களுக்கு விமான நிறுவனம் உத்தரவு

Published On 2023-01-06 20:29 GMT   |   Update On 2023-01-06 20:29 GMT
  • அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
  • அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தற்போது தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்களுக்கு தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயணியின் வெறுப்பு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியது. அவரது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

அறிக்கை செய்யப்பட்டதை விட சம்பவம் சிக்கலானதாக இருக்கிறது. அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் தெளிவாக உள்ளன. விமானத்தில் ஒரு சம்பவம் முறையற்ற நடத்தையை கொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே

தீர்க்கப்பட்டு விட்டதாக இருந்தாலும் அதை ஆரம்பத்தில் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News