இந்தியா

விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்- பெண் பைலட் காயம்

Published On 2022-07-25 14:34 IST   |   Update On 2022-07-25 14:34:00 IST
  • விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

புனே:

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. தனியார் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான அந்த விமானம், புனேயில் உள்ள பாரமதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.

காத்பன்வாடி பகுதியில் நடந்த இந்த விபத்தில், பயிற்சி விமானி பாவனா ரத்தோட் காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News