இந்தியா

மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி

Published On 2024-02-29 08:19 IST   |   Update On 2024-02-29 08:19:00 IST
  • கிராம மக்கள் ஒரு விழாவிற்குச் சென்று சொந்த ஊர் திரும்பிய போது வேன் விபத்தில் சிக்கியது.
  • 21 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் கிராம மக்களை ஏற்றிச் சென்ற வேன் (pickup vehicle) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிராம மக்கள், தங்களது சொந்த ஊரான டெவாரி கிராமத்திற்கு வாகனத்தில திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்றிரவு பட்ஜார் என்ற இடத்தில் அந்த வாகனம் வந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News