இந்தியா

தெருநாய் வழக்கு உலகம் முழுவதும் என்னை பிரபலமாக்கியது - உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்

Published On 2025-08-31 12:46 IST   |   Update On 2025-08-31 12:46:00 IST
  • உலகம் முழுவதும் என்னை பிரபலமாக்கிய தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
  • இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்காக நமது தலைமை நீதிபதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.

இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.

இந்நிலையில், தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகளில் ஒருவரான விக்ரம் நாத், தெருநாய் வழக்கு தன்னை உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்துள்ளதாக தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய நீதிபதி நாத், "நீண்ட காலமாக, நான் எனது சிறிய வேலைகளுக்காக சட்டத்துறையில் அறியப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் அளித்ததற்காக தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்காக நமது தலைமை நீதிபதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

2027 இல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக விக்ரம் நாத் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News