தொற்று நோயாக மாறும் தனிமை.. ஓய்வு நேரத்தில் பைக் டாக்சி ஓட்டும் Infosys ஊழியர் பற்றிய பெண்ணின் பதிவு வைரல்
- தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா?
- நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது ஓய்வு நேரங்களில் பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.
இந்த விடயம் கடந்த வாரத்தில் இருந்து பயங்கர வைரலாகி வந்தது. மேலும் சமூக ஊடககங்களிலும் நெட்டிசன்கள் இதுகுறித்து தீவிரமாக விவாவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த ஊழியர் குறித்து பெண் ஒருவர் போட்ட பதவு மேலும் வைரலாகி வருகிறது.
அதாவது," அதிகமான மக்கள் கிக் வேலையை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.
மேலும் " நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?" என்றும் அவர் தனது பதிவில் வினவியிருந்தார்.
உண்மை கசக்கும் என்பதற்கிணங்க இந்த பதிவு குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.