மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்- நடிகர் விஜய்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குனர் சங்கர் வாக்களித்தார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குனர் சங்கர் மகள் நடிகை அதீதி சங்கர் வாக்களித்தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் விஷால் வாக்களித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வாக்களித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் 530 ஓட்டுகள் காணவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மோத்தக்கல் ஊராட்சியில் 500 மேற்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பு.
கோயம்புத்தூ மாவட்டம் சூலூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அண்ணாமலை நேரில் ஆய்வு.
சென்னை தியாகராயநகரில் உள்ள பள்ளியில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் மற்றும் நடிகை பவானி ஸ்ரீ வாக்களித்தனர்.