null
குடிநீர் பிரச்சனை எதிரொலி: குஷால்நகரில் டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகம்
- குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
- மக்கள் கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடகு:
குடகு மாவட்டம் குஷால்நகர் டவுன் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மழை பெய்யாததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக குஷால்நகர் டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குஷால்நகர் டவுன் பஞ்சாயத்து சார்பில் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி குஷால்நகர் பகுதி மக்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மக்கள் கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள், குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருவதாகவும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.