இந்தியா
ரூ. 45 லட்சத்துக்கு ஏலம் போன பேன்சி நம்பர் பிளேட்: கேரளாவில் இது அதிகபட்சம்
- பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
- பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.
திருவனந்தபுரம்:
எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.
இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு திருவனந்தபுரம் போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரம் போக்குவரத்துத்துறை நடத்திய ஏலத்தில் KL 07 DG 0007 என்ற பேன்சி எண் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இது அம்மாநிலத்தில் வாகனப் பதிவெண் விற்பனையிலேயே அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.
இதேபோல், KL 07 DG 0001 என்ற மற்றொரு பதிவு எண் 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.