இந்தியா

கேரளாவில் தொடரும் சோகம்- அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒரு பெண் மரணம்

Published On 2025-09-08 12:54 IST   |   Update On 2025-09-08 12:54:00 IST
  • மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
  • ஒரே மாதத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரளாவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் மக்களை பல்வேறு நோய்கள் சமீப காலமாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக அமீபிக் மூளைக் காய்ச்சல் பலரையும் தாக்கி உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.

சுல்தான்பத்தேரி ரதீஷ், கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை, மலப்புரம் ரம்லா (வயது 52), தாமரசேரியில் 9 வயது சிறுமி ஆகியோர் இந்த மாதம் அமீபிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

இந்த நிலையில் மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மலப்புரம் மாவட்டம் வாண்டூரை சேர்ந்த ஷோபனா என்ற பெண் இன்று இறந்தார்.

ஒரே மாதத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரளாவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News