இந்தியா

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 107 ஆண்டு சிறை- கேரள போக்சோ நீதிமன்றம் அதிரடி

Published On 2022-11-29 12:31 GMT   |   Update On 2022-11-29 12:31 GMT
  • சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூறிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.
  • பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

திருவனந்தபுரம்:

கேரளாவின் பத்தனம்திட்டாவில் 45 வயது நபர் ஒருவரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் மனநலம் பாதித்த மகளை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி 13 வயது நிரம்பிய நிலையில், பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2020ல் இந்த கொடுமை நடந்துள்ளது. சிறுமி தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் இதைப் பற்றி கூறிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி அவரது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

சில பிரிவுகளுக்கான தண்டனைகளை ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதால், குற்றவாளி மொத்தம் 67 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

Tags:    

Similar News