இந்தியா

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: 1.5 லட்சம் வேட்புமனுக்கள் ஏற்பு

Published On 2025-11-23 21:34 IST   |   Update On 2025-11-23 21:34:00 IST
  • டிசம்பர் 9 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
  • டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, நேற்று மனுக்கள் மீதான ஆய்வு நடைபெற்றது. இதில் 1.55 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர்கள் 82020 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 72524 மனுக்கள் ஏற்கபப்ட்டுள்ளது. மூன்று திருநங்கைகள் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. 2479 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் 1354 பெண்கள், 1125 ஆண்கள் மனுக்களாகும்.

மொத்தமாக 1,07,211 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் 56,501 பெண்கள், 50,709 ஆண்கள் ஆவார்கள். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதனால் நாளை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன்பின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.

941 கிராம பஞ்சாயத்தில் உள்ள 17,337 வார்டுகளுக்கும், 125 பிளாக் பஞ்சாயத்தில் உள்ள 2,267 வார்டுகளுக்கும், 14 மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 346 வார்டுகளுக்கும், 86 நகராட்சியில் உள்ள 3,205 வார்டுகளுக்கும், 6 மாநராட்சியில் உள 421 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Tags:    

Similar News