இந்தியா

தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டு: உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்- பினராயி விஜயன்

Published On 2024-09-02 12:55 IST   |   Update On 2024-09-02 12:55:00 IST
  • எம்.எல்.ஏ. அன்வர் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.
  • காவல்துறைக்குள் எந்த விதமான ஒழுக்க மீறல் ஏற்பட்டாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாது- பினராயி விஜயன்.

கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்வர், முதல்வர் பினராயி விஜயனின் அரசியல் செயலாளர் பி. சசி மற்றும் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அஜித் குமார் ஆகியோர் அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்புளளதாகவும், கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். மேலும், பத்தனம்திட்டை எஸ்.பி. சுஜித் தாஸ் மீதும் குற்றச்சாட்டியிருந்தார்.

இவரை குற்றசாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராஜி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

எழுந்துள்ள பிரச்சனைகளை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், காவல்துறைக்குள் எந்த விதமான ஒழுக்க மீறல் ஏற்பட்டாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News