இந்தியா

14 மணி நேர மின்சாரம் தடை: ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது- உமர் அப்துல்லா விமர்சனம்

Published On 2023-11-21 02:28 GMT   |   Update On 2023-11-21 02:28 GMT
  • 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள்.
  • துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா குல்காம் மாவட்டத்தில் நடந்த பேரணில் கலந்த கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. தேர்தல், வேலைவாய்ப்பின்மையை தீர்ப்போம், வளர்ச்சியடையச் செய்வோம் என்ற பேரில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசால் துரோகம் இழைக்கப்படுகிறது.

இதுவரை மின்சாரம் தடைக்கு தீர்வு காணப்படாதது ஏன்?. இன்று, ஏராளமாக பணம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, 14 மணி நேர மின்சார தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?.

காஷ்மீரில் பல்வேறு மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு 370-வது பிரிவுதான் காரணம். 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள். ஆனால், இந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.

5 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசு சொல்கிறது. இதில் நான்கு பேர் 2020-ல் ஆயுதத்தை கையில் எடுத்தவர்கள். 2021-ல் ஒருவர் கையில் எடுத்தார். இதெல்லாம் 2019-க்குப் பிறகுதான். அரசு தோல்வி அடைந்ததைத்தான் இது காட்டுகிறது. இது உங்களின் (மத்திய அரசு) ஏமாற்றத்தை காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்த மக்களையும் ஏமாற்றிவிட்டீர்கள்.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News