இந்தியா
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேர் கைது: கர்நாடகாவில் தாக்குதல் நடத்த சதியா?
- ஐந்து பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
- ஜெயிலில் இருக்கும்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள்
கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் குண்டு வைக்க திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் 5 பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து நான்கு வால்கி-டால்கி, 7 நாட்டு துப்பாக்கி, 42 தோட்டாக்கள், 2 கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், 2 சேட்டிலைட் போன்கள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.