null
26 முறை தாக்க முயற்சி - அதிவேக ஏவுகணையை பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோபியா குரேஷி
- பஞ்சாபில் உள்ள விமானப்படை தளத்தை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானின் செயல் முறியடிக்கப்பட்டது.
- பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் பல்லஸ்டிக் ஏவுகணையை இந்தியா பயன்படுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.
பாகிஸ்தான் நேற்றிரவு பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை குறிவைத்து தாக்கியது. பஞ்சாப் மாநிலத்தில் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் அதிக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்த நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தொடர் தாக்குதலுக்கு தரப்படும் பதிலடி குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இதுதொடர்பாக கர்னல் சோபியா குரேஷி கூறியதாவது:
* பஞ்சாபில் உள்ள விமானப்படை தளத்தை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானின் செயல் முறியடிக்கப்பட்டது.
* நேற்றிரவு முதல் அதிகாலை வரை 26 முறை இந்தியாவை தாக்குவதற்கு பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.
* பஞ்சாபில் உள்ள விமானப்படை தளத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியதால் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.
* அதிகாலை 1.40 மணிக்கு இந்தியாவை தாக்குவதற்கு அதிவேக ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
* பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் பல்லஸ்டிக் ஏவுகணையை இந்தியா பயன்படுத்தி உள்ளது.
* ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தையும் பாகிஸ்தான் குறி வைத்துள்ளது.
* ஸ்ரீநகரில் உள்ள பள்ளி, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பாகிஸ்தான் குறி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.