பஞ்சாபில் கபடி வீரர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை
- தேஜ்பால் சிங் (26) தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி வந்தார்.
- இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் இளம்கபடி வீரர் நேற்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று லூதியாணாவில் உள்ள ஜக்ரான் நகரில், தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வந்த கபடி வீரரான தேஜ்பால் சிங் (26) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் கூறினர்.
இந்த சம்பவம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பழைய பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.