null
அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர். ஓட்டு போட்டனர்
- போலீஸ் பாதுகாப்புடன் நடிகர்கள் இருவரும் வரிசையில் இன்று ஓட்டு போட்டனர்.
- முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஐதராபாத் ஜூப்ளிஹில்சில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
அவர்களை கண்டதும் வாக்குச்சாவடியில் நின்றிருந்த ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
போலீஸ் பாதுகாப்புடன் நடிகர்கள் இருவரும் வரிசையில் இன்று ஓட்டு போட்டனர். அப்போது அல்லு அர்ஜுன் கூறியதாவது:-
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இன்று ஒரு முக்கியமான நாள் என்பதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தயவு செய்து உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். இது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்.
ஏராளமானோர் வாக்களிக்க வருவதால் அதிக அளவில் வாக்காளர்கள் குவிந்துள்ளனர். நான் அரசியல் ரீதியாக எந்த கட்சியுடன் இணைந்திருக்கவில்லை. நான் அனைத்து கட்சிகளுக்கும் நடுநிலையாக இருக்கிறேன் என்றார்.
தெலுங்கானா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். மேலும் பாஜக வேட்பாளர் மாதவிலதா அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.