இந்தியா

150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் - பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழப்பு

Published On 2025-07-15 22:53 IST   |   Update On 2025-07-15 22:53:00 IST
  • அவர்கள் அனைவரும் போக்தா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உத்தரகாண்ட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) மாலை, பித்தோராகர் மாவட்டத்தில் முவானி கிராமத்திலிருந்து போக்தா கிராமத்திற்கு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 150 அடி ஆழமான பள்ளத்தில் கழிவந்தது.

இதில் பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் போக்தா பகுதியைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த மூன்று பயணிகள் தற்போது முவானியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News