ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு
கந்தர்பால் கங்கன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி
புலம்பெயர்ந்த வாக்காளர் பூலா பட் "நான் என்னுடைய வாக்கை செலுத்தியுள்ளேன். எல்லோரும் வாக்குச்சாவடி வந்து வாக்கை செலுத்த வேண்டும். வாக்குமையத்தில் வசதிகள் சிறப்பாக உள்ளது" என்றார்.
ஜம்மு-காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கப் போகும் அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகபட்ச அளவில் திரண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவரும் மற்றும் நவ்ஷேரா தொகுதி வேட்பாளருமான ரவீந்தர் ரெய்னா காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரம் சரியாக வேலை செய்கிறரா? என அதிகாரிகள் பரிசோதிக்கும் காட்சி
ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்று வாக்குப்பதிவு மையத்தில் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு தயாராகும் காட்சி.