ஜம்மு காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு.. 120 பேர் படுகாயம்
- 220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
- வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.