இந்தியா

சுயசரிதை வெளியிடும் முடிவை வாபஸ் பெற்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Published On 2023-11-04 15:44 GMT   |   Update On 2023-11-04 15:44 GMT
  • முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும்.
  • இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் "நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்" என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கே.சிவன் குறித்து சில விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சோம்நாத் தனது சுயசரிதையில் தனது முன்னோடியான சிவனைப் பற்றி சில விமர்சனக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், " ஒரு நிறுவனத்தில் உயர் பதவியை அடைவதற்கான பயணத்தின் போது ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இதுபோன்ற முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும். அவற்றில் ஒன்று ஒரு நிறுவனத்தில் பதவிகளை பெறுவது தொடர்பான சவால்கள். இவை அனைவரும் கடக்க வேண்டிய சவால்கள்.

அதிகமான நபர்கள் குறிப்பிடத்தக்க பதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். நான் அந்த குறிப்பிட்ட விஷயத்தை வெளியே கொண்டு வர முயற்சித்தேன். இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை" என்றார்.

சந்திரயான்-2 விண்கலம் தோல்வியடைந்தது குறித்த அறிவிப்பில் இருந்த தெளிவின்மை குறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

Tags:    

Similar News