இந்தியா
ஐபிஎல் சூதாட்டம்... 15 ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு நோட்டீஸ்
- 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- இது தொடர்பாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் (opinion trading) போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ (Probo), எம்.பி.எல் (MPL) மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி (SportsBaazi) போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.
இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.