மோடி அரசின் "நல்ல நாட்கள்" வாக்குறுதிக்குப் பதிலாக "கடன் நாட்கள்" வந்துவிட்டன: காங்கிரஸ் விமர்சனம்
- இந்திய நாட்டு மக்களின் சேமிப்பு குறைந்து கொண்டு வருகிறது. கடன் அதிரிகத்து வருகிறது.
- இந்திய நாட்டு மக்களின் சேமிப்பு குறைந்து கொண்டு வருகிறது. கடன் அதிரிகத்து வருகிறது.
சாதாரண மக்களுக்கான பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டு மக்களின் சேமிப்பு குறைந்து கொண்டு வருகிறது. கடன் அதிரிகத்து வருகிறது. ஒருபக்கம் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு மக்கள் மக்களின் வருமானம் குறைந்து வருகிறது. இதுதான் இதற்கான அர்த்தம். இதன் முடிவாக மக்கள் அவர்களுக்கு சேமிப்பு பணத்தை திரும்பப்பெற வேண்டும். அல்லது கடன் பெற்று உயிர் வாழ வேண்டாம்.
இந்தியாவின் சாதாரண மக்கள் பொருளாதார நிலையால் கவலையடைந்து வரும் நிலையில், மோடி அரசு முற்றிலும் அலட்சியமாக உள்ளது.
இதன்மூலம் மோடி அரசின் நல்ல நாட்கள் வாக்குறுதிக்குப் பதிலாக, கடன் நாட்கள் வந்துவிட்டன என்பது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.