இந்தியா

கடந்த 5 மாதங்களில் ஆன்லைன் மோசடிகளால் ரூ. 7,000 கோடியை இழந்த இந்தியர்கள் - அதிர்ச்சி அறிக்கை

Published On 2025-07-16 04:30 IST   |   Update On 2025-07-16 04:30:00 IST
  • ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர்.
  • பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.

2025 இன் முதல் ஐந்து மாதங்களில், இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ரூ.7,000 கோடியை இழந்துள்ளனர்.

அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நிகழ்ந்துள்ளது. சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் மோசடி மற்றும் மேலாண்மை அமைப்பின் ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை நாட்டில் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. புகார் அளிக்கப்படாத வழக்குகளையும் சேர்த்தால், தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்தப் பணத்தில் பாதிக்கும் மேற்பட்டவை கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட மோசடி மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

சீன ஆபரேட்டர்களால் கட்டுப்படுத்தப்படும் மிகவும் பாதுகாப்பான மையங்களில் மோசடிக்காரர்களின் நடவடிக்கைகள் மேற்கொள்படுகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மோசடி செய்பவர்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர். பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக கம்போடியாவைச் சேர்ந்த அதிகாரிகள் சமீபத்தில் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். கம்போடியாவில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் 45 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. லாவோஸில் 5, மியான்மரில் 1 மையம் கண்டறியப்பட்டது . இந்த மோசடிகாரர்கள் முக்கியமாக பங்கு வர்த்தகம், முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைதுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியர்களை வைக்காதே இந்த மோசடிகளை அரங்கேற்றும் கும்பல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவில் சுமார் 5,000 இந்தியர்கள் சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News