இந்தியா
அரபிக் கடலில் 11 நாட்களாக சிக்கித் தவித்த 31 மீனவர்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை
- புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் படகு மாயமானது.
- விமானம், ரோந்து படகு மூலம் தேடுதல் வேட்டையில் காவல்படை ஈடுபட்டது.
ஸ்டீரிங் கியர் பழுது காரணமாக 11 நாட்களாக அரபிக் கடலில் சிக்கித் தவித்த 31 மீனர்களை பத்திரமாக மீட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கோவாவைச் சேர்ந்த படகு, புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடுமையான கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் கடலோர காவல்படை விமானம் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று, விமானம் படகு தவித்துக் கொண்டிருந்த இடத்தை கண்டுபிடித்தது.
பின்னர் வீரர்கள் படகை சென்றடைந்து, முக்கியமான உதவிகளை அளித்து, மற்றொரு படகு உதவியுடன் மீன்படி துறைமுகத்திற்கு பழுதான படகை மீனவர்களுடன் கொண்டு வந்தனர்.